சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை

சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை
X

கொலை செய்யப்பட்ட லாரி தரகர் பவானிகுமார்

Murder Case- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்

Murder Case- சாத்தூர் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சின்னகொல்லபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவானிகுமார் (46). இவர் சாத்தூரில் லாரி தரகராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த செல்வம் (48) என்பவரும் நீண்ட நாள் நண்பர்கள். இந்த நிலையில் அமீர்பாளையம், முனியசாமி கோவில் அருகே பவானிகுமார் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பவானிகுமார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் பவானிகுமாரும், செல்வமும் மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் செல்வம், பவானிகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வந்தனர். சாத்தூர் வைப்பாற்று பகுதியில் மறைந்திருந்த செல்வத்தை, போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி தகராறில் கொலை நடந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட செல்வத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!