இராசபாளையத்தில் உலக சாதனை படைத்த 9 பேர்

இராசபாளையத்தில் உலக சாதனை  படைத்த  9 பேர்
X

இராஜபாளையம் ரமணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் 9 பேர் தனித்தனியாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்  சாதனை செய்தனர்

இராஜபாளையத்தில் 9 பேர் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்

இராஜபாளையத்தில் 9 பேர் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்து அசத்தல

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ரமணா ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் 9 பேர் தனித்தனியாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தக சாதனைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே தங்களுடைய திறமைகளை வீடியோவாக எடுத்து அனுப்பி இன்று நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தின் நடுவர்கள் அரவிந்த், வினோத், ஹேமத்குமார் ஆகியோர் முன்னிலையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி சாதனைகளை செய்தனர் .

அவர்கள் நேரத்தையும் எத்தனை வினாடிகளில் செய்து முடிக்கின்றார்கள் என்று கணக்கிட்டனர் முதலாவதாக, டாக்டர் யமுனா( 36 ). இவர் 66 கிலோ எடை உள்ளவர். சுவற்றில் சாய்ந்து குத்து காலிட்டு அமர்ந்தபடியே தன் மடியில் 100 கிலோ எடையை தாங்கி ஒரு நிமிடம் 21 வினாடிகள் நின்று சாதனை படைத்தார் .

இவரைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி( 36.) என்பவர்65 கிலோ எடை உள்ளவர் தனது கைகள் இரண்டையும் தரையில் முழங்காலிட்டு கால்களை நீட்டி இவரது முதுகில் 80 கிலோ எடை சுமந்து 43 வினாடிகள் செய்து சாதனை படைத்தார். இதேபோல் பிரபாகரன்(49.). என்பவர்70 கிலோ எடையை தண்டால் (பிளாங் புஷப்ஸ் ) என்ற முறையில் ஒரு நிமிடம் 19 வினாடிகள் சாதனை படைத்தார் .

இதேபோல் ,கருப்பசாமி( 41 )என்பவர் குதித்து தண்டால் செய்து 30 வினாடிகளில் 16 முறை செய்து சாதனை படைத்தார். ராமசுப்பிரமணியம்(47 ) என்பவர் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதரை தன் மீது படுக்க வைத்து 1.17 வினாடிகளில் சாதனை படைத்தார். சரவணன் ஐயப்பன்(43) என்பவர் 70 கிலோ எடையை 31 முறை ஜம்பிங் செய்து சாதனை படைத்தார்.

சங்கர் கணேஷ்(47 ) என்பவர் பிஷப்ஸ் மூலம் மூன்று பேரை தன் மேல்தண்டால் எடுப்பது போல் வைத்து 173 கிலோ எடையை 1.7 நிமிடத்தில் செய்து சாதனை படைத்தார் .மற்றொருவரான சிவகணேஷ்( 22 ) என்பவர் இரண்டு கைகளிலும் 10 கிலோ 10 கிலோ எடையை தூக்கிக் கொண்டு மொத்தம் 20 கிலோ எடையை கையில் உயர்த்தி ஜம்பிங் செய்து 43 வினாடியில் 32 முறை செய்து சாதனை படைத்தார் .

இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து பயிற்சியாளராக இருக்கக்கூடிய நாகராஜ்( 57 )என்பவர் ஏணிப்படிகள் மீது 20 அடி உயரத்தில் இரண்டு கைகளை வைத்து மேலேயும் கீழேயும் சென்று 21 வினாடியில் சாதனை படைத்தார். இந்த நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையில் இடம் பெற்றவர்களுக்கு நடுவர்களாக இருந்த அரவிந்த் வினோத் ஹேமத்குமார் ஆகியோர் சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.

மேலும் , நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை செய்பவர்களை நடுவராக இருந்து கண்காணிக்க நாகராஜ் என்பவரை தேர்வு செய்து அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையும் வழங்கி கௌரவித்தனர்.

Tags

Next Story
ai powered agriculture