இராஜபாளையம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்

இராஜபாளையம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்
X

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்.

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் 42-வது வார்டு பகுதி மக்கள் முறையாக தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் 42-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஏழை, எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாததால் தங்களால் விலை கொடுத்து குடிநீர் வாங்க முடியாது எனவும், மெத்தனமாக செயல்படும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!