இராசபாளையத்தில் நகை பறிக்கும் முயற்சியில் பெண் காயம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுபஸ்ரீ
செயின் பறிப்பு மற்றும் வீட்டு உபயோக பொருள் கடையில் புகுந்து திருட முயன்ற போது காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள ஞானசம்பந்தம் தெருவில் விஷ்ணுசங்கர் ( 32 ). இவருக்கு திருமணமாகி சுபஸ்ரீ ( 28) என்ற மனைவியும், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . சுபஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த நிலையில், வாலிபர் ஒருவர் முகவரி விசாரிப்பது போல் சென்று சுரேஷ் என்ற பெயரைக் கூறி விசாரித்துள்ளார். அந்த பெண் அப்படி யாரும் எனக்கு தெரியாது என கூறிய நிலையில், தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார். தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற சுபஸ்ரீ யை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் சுபஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார் .
சுபஸ்ரீ இறுக்கி பிடித்த நிலையில் கூச்சலிட்டதை அடுத்து , குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். சுபஸ்ரீ கழுத்தில் காயம் ஏற்பட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டபகலில் செயின் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக போலீஸ்சார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டு உபயோகப் பொருள் கடையில் கம்ப்யூட்டர் மற்றும் பணம் திருட்டு:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கடையில் இருந்த கம்ப்யூட்டர் டிவி மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர் .
இதுகுறித்து கடை உரிமையாளர் தினேஷ் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த இரண்டு குற்ற சம்பவங்களும் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu