இராசபாளையத்தில் மழை பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கல்

இராசபாளையத்தில் மழை பாதித்த மக்களுக்கு நிவாரணப்பொருள் வழங்கல்
X

மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இராசபாளையத்தில், மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில், பருவ மழையின்போது வீடுகள் இடிந்து மற்றும் மேற்கூரைகள் இடிந்து சேதமடைந்தது என வட்டாச்சியர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, வட்டாச்சியர் தலைமையில் வருவாய்துறையினர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். ௧௨௦-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டனர் .

பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் முதற்கட்டமாக, அரிசி பருப்பு போர்வை பாய் மற்றும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவிகளை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வழங்கினார். அவருடைய சொந்த பணத்தில் மூன்று லட்ச ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது