விருதுநகர்: ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர்: ஊராட்சி தலைவரை கண்டித்து  உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
X

தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

விருதுநகர் மாவட்டம், ராசபாளையத்தில், ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமியைக் கண்டித்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் நிர்வாகம் முறைகேடு செய்து வருவதாகவும், தற்போது கொரோனா காலங்களில் நடமாடும் காய்கறி வண்டிகள் அப்பகுதியில் இயங்குவதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வியாபாரிகளிடம் பணம் பெற்று வருவதாகவும், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் கணக்கு வழக்குகள் கேட்டாள் ஜாதி உட்புகுத்தி பேசி மிரட்டல் விடுப்பதாக கூறி ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 7 பேர் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும், விசாரணை நடத்தாமல் ஊராட்சி மன்றத் தலைவரின் ஊழலுக்கு துணை போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு