விருதுநகர் மருந்துகடை வியாபாரிகள் சங்க பொதுக் குழுக் கூட்டம்

விருதுநகர் மருந்துகடை வியாபாரிகள் சங்க பொதுக் குழுக் கூட்டம்
X

விருதுநகரில் நடைபெற்ற மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, மருந்துக் கடை வணிகர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

ஆன்லைன் வழியாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்

விருதுநகரில் மருந்துக் கடை வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது.

விருதுநகரில், மருந்துக் கடை வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மருந்துக் கடை வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் மாயக்கண்ணன் தலைமையில், செயலாளர் கணேசமூர்த்தி, பொருளாளர் செல்வம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், மருந்து கட்டுப்பாடுத்துறை உதவி இயக்குநர் இளங்கோ, ஆய்வாளர்கள் பாலமுருகன், பால்ராஜா, சமூகநலத்துறை அலுவலர் ஜோஸ்பின் உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற, மருந்துக் கடை வணிகர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சங்க கூட்டத்தில், தடை செய்யப்பட்டுள்ள 14 வகை மருந்துகளை தங்களது மருந்து விற்பனை கடைகளில் விற்பனை செய்வதில்லை என்றும், ஆன்லைன் வழியாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், பார்மசி படித்தவர்களை மட்டுமே மருந்துக் கடைகளில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil