/* */

விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும் படை தீவிரம்! பணம் பறிமுதல்!

விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும் படை தீவிரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும் படை தீவிரம்! பணம் பறிமுதல்!
X

விருதுநகர் மாவட்டத்தில், பறக்கும் படை மடக்கிப்பிடித்த பணம் பறிமுதல்.

இராஜபாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.54 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை:

விருதுநகர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் உரிய ஆவணங்களில் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.54 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு வேளாண் அதிகாரி மாரிமுத்து மற்றும் போலீஸார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்ட போது, ரூ.1.54 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, ஓட்டுநர் ஜோசப் ராஜாவிடம் விசாரித்த போது, திருப்பூரில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு, தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இறக்கி விட்டு திரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால்,ரூ.1.54 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வாட்டாட்சியர் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 18 March 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது