/* */

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: விருதுநகரில் அமமுகவினர் ஆலோசனை

நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்

HIGHLIGHTS

நகர்ப்புற  உள்ளாட்சித்தேர்தல்: விருதுநகரில் அமமுகவினர்  ஆலோசனை
X

ராஜபாளைய அருகே சத்திரப்பட்டியில் நடந்த அமமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் 

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக விருதுநகரில் மாவட்ட அமமுகதேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில், விருதுநகர் மத்திய மாவட்ட, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமை வகித்து நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது: நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். மேலும் இந்தப் பகுதியில், 2 ஒன்றிய செயலாளர்களை நியமனம் செய்வதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

புதிய ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டவுடன், கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை முதலமைச்சர் ஆக்குவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும். விருதுநகர் மத்திய மாவட்ட அனைத்து கிளை பகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கம்பங்கள் அமைத்து, அ.ம.மு.க கொடி ஏற்ற வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட துணைச்செயலாளர் மாரிச்சாமி, சம்சிகாபுரம் கிளைச்செயலாளர் தவம், ஆசிலாபுரம் கிளைச்செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் மாயி, பத்மநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்