இராஜபாளையம் அருகே, புகையிலை பொருட்களை கடத்தியதாக இருவர் கைது:

இராஜபாளையம் அருகே, புகையிலை பொருட்களை கடத்தியதாக இருவர் கைது:
X

ராஜபாளையம் அருகே புகையிலை பொருளை கடத்திய, இருவர் கைது.

ராஜபாளையத்தில், புகையிலை பொருட்கள் கடத்திச் சென்ற இருவரை கைது செய்த காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராஜபாளையம்

காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி உத்தரவின் பேரில், வடக்கு காவல்நிலைய காவல்துறையினர் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது, அதில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜபாளையம், காட்டுநாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (24) மற்றும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த காந்திராஜா (31) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!