ஊராட்சி செயலாளரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

ஊராட்சி செயலாளரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
X

விருதுநகர் அருகே ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்.

ஊராட்சி செயலாளரை கண்டித்து கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணிப்பு செய்தனர்.

இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் ஊராட்சி செயலாளர் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கிராமசபை கூட்டத்திற்கு, பொதுமக்களுக்கு முறையான அழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி கடல் கனி மற்றும் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி செயலாளர் முறையான தகவல் தெரிவிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி பொதுமக்களும் வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

மேலும், கிராமசபை கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தரவில்லை முக்கியமான குடிநீர் பிரச்சினை கூட தீர்வு கிடைக்கவில்லை என கூறி, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி கடல் கனியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது,ஊராட்சி செயலாளர் தீர்மானம் நோட்டில் கையெழுத்து வாங்க முயன்றதால், வாக்குவாதம் ஏற்பட்டு பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.

வெளிநடப்பு செய்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக கூறுகையில் உடனடியாக இந்த ஊராட்சி மன்ற செயலாளர் சீமானை, மாற்ற வேண்டும் கடந்த 15 ஆண்டு காலமாக அவர் ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார் என குற்றச்சாட்டி உள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself