பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!
X

ராஜபாளையத்தில் ,தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் கோரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் உள்ள இராமதாரி திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது..

விழாவிற்கு, வட்டாரத் தலைவர் இரா.பழனியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் பி.வரதராஜ் முன்னிலை வகித்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வட்டாரச் செயலாளர் இரா.இராமராஜ் வரவேற்றுப் பேசினார்.

பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மாநிலத் தலைவர் சு.குணசேகரன் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார் இதை அடுத்து, செய்தியாளர்களை மாநிலத் தலைவர் குணசேகரன் சந்தித்தார்.தமிழக அரசு எங்களது 30 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகளை ஏற்றுவிட்டது. நிதி சார்ந்த கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை..

எங்களது இயக்கத்தின் மாநில கூட்டம் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது.

அன்றைய கூட்டத்தில் இயக்க உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம். அதே போல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ,இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார். எம் மிஸ் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். ஆனால், அமைச்சர் இந்த திட்டத்தை பேச முடிவெடுக்கப்படும் ஆசிரியர்கள் கல்வி பணி மட்டுமே கொள்ளுங்கள் என, கூறியுள்ளார்.

இந்த திட்டத்தால் ஆசிரியருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. ஆகையால், இது நிரந்தரமாக நடித்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை இராஜபாளையம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் இல.முத்துராமலிங்கம்,கோ.விஜயலட்சுமி,சு.

அனுராதா ஆகியோர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டிப் பேசினார்கள். விழாவில், மாவட்டத் தலைவர் கி.திலகராஜ், மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் ச.காளிமுத்து ,மாவட்ட துணைச் செயலாளர் ந.இசக்கி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் சு.செல்வின்ராஜ் ,டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுபெற்ற தலைமை ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.

விழா முடிவில், வட்டாரப் பொருளாளர் க.ரவி நன்றி கூறினார். விழாவில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்,இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பிரிவு இயக்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!