மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்: சென்னை, கோவை அணிகள் சாம்பியன்

மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்: சென்னை, கோவை அணிகள் சாம்பியன்
X

தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் மாநில யூத் சாம்பியன்ஷிப் மற்றும் விருதுநகர் மாவட்ட கைபந்து கழகம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டிகள் மாநில அளவில்  நடத்தியது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் ராம்கோ ஊர் காவல் படை மைதானத்தில் நடைபெற்றது

மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் 35 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகள் சேர்ந்த 1000 க்கும மேற்பட்ட வீரர்கள் விளையாடியது. பெண்கள் பிரிவில், சென்னையும் ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் அணியும் வெற்றி பெற்றது.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் ராம்கோ ஊர் காவல் படை மைதானத்தில், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சார்பில் மாநில யூத் சாம்பியன்ஷிப் மற்றும் விருதுநகர் மாவட்ட கைபந்து கழகம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்ட யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டிகள் மாநில அளவில் கடந்த 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.

இதில், சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ,திருநெல்வேலி உள்ளிட்ட 35 மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் வீரர்களும் 29 மாவட்டத்தை சேர்ந்த பெண் வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் ,1000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் 430 அணிகள் கலந்து கொண்டு பகல் இரவு ஆட்டங்களில் விளையாடினர் .

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியை துவங்கி வைத்தனர். இறுதி போட்டியில், பெண்கள் அணியில் சென்னை அணி முதல் இடத்திலும், சேலம் இரண்டாவது இடத்தையும், கிருஷ்ணகிரி மூன்றாவது இடத்தையும், மதுரை நான்காவது இடத்தில் பிடித்தது.

இதேபோல், ஆண்கள் பிரிவில் கோயம்புத்தூர் முதல் இடத்தில், திருவாரூர் இரண்டாவது இடத்தையும், சேலம் மூன்றாவது இடத்தையும், தூத்துக்குடி நான்காவது இடத்தையும் பிடித்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பையும் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business