அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி
X

ராஜபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

ராஜபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 6 நாள் தலைமைப் பண்பு பயிற்சி ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் திங்கள்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவிற்கு, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் வரவேற்றார்.

பயிற்சியைத் தொடங்கி வைத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (பயிற்சி) வை.குமார், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

இப்பயிற்சியில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 202 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநில கருத்தாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அவர்களது மாவட்டங்களில் உள்ள ஏனைய தலைமை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியை அளிப்பார்கள்.

மேலும், பயற்சியில், மாநிலத்தின் முதன்மைத் திட்டங்களும் தலைமை ஆசிரியர்களும், கலையும் கல்வியும், நூல் திறனாய்வு, குழந்தை உரிமைகள், கற்றல் கற்பித்தல் புதுமை, நாம் எங்கே தோற்றம்? வளரிளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்கள், வாசிப்பை நேசிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துரையாற்றுகின்றனர்.

பயிற்சியில் பள்ளி கல்வி தகவல் மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மை கோப்புகளை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

இப் பயிற்சி உண்டு உறைவிடப் பயிற்சியாக 6 நாட்கள் நடைபெறுகிறது.

Tags

Next Story
ai in future agriculture