விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி: 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி: 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
X

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில், மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 78 பள்ளிகள் மற்றும் 28 கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா நீச்சல் போட்டியை துவக்கி வைத்தார். போட்டிகள் அனைத்தும் டைம் டிரெயில் முறையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் செயலாளர் நாராயணமூர்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். புள்ளிகளின் அடிப்படையில், பள்ளிகள் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுழற் கோப்பைகளை வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர்.

கல்லூரிகளுக்கான பிரிவில் ஆண்களுக்கான சுழற் கோப்பையை சென்னை பார்ட்டீஷியன் கலைக்கல்லூரி மாணவர்களும், பெண்களுக்கான சுழற்கோப்பையை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவிகளும் பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை நீச்சல் அகாடமி நிர்வாகிகளும், கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare