காரியாபட்டியில் சாயிபாபா ஆலய சிறப்பு பூஜை

காரியாபட்டியில் சாயிபாபா ஆலய சிறப்பு பூஜை
X

காரியாபட்டி சாய்பாபா கோவில் வருஷாபிஷேகம்

காரியாபட்டி - நரிக்குடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர சாய்நாதர் கோயில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது

காரியாபட்டி அருகே சாய்பாபா கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி - நரிக்குடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீகுபேர சாய்நாதர் கோயில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் நாள் ஸ்ரீ பகவதி சேவை மற்றும் தீபராதானை நடைபெற்றது.

நேற்று காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது., கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. சாய்நாதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சாய்நாதர் ஸ்ரீ மகா கணபதி பாலமுருகன் வெங்கடா ஜலபதி மகாலட்சுமி ஸ்ரீ சாய் ராதாகிருஷ்ணன் ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ குபேர சாய் பாபா திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!