ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம்

ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம்
X

ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சித்தர்கள் வழிபாட்டு ஊர்வலம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சர்ச் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் 18 சித்தர்கள் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டது. கோவில் விழா கமிட்டி த் தலைவர் அபிமன்யூ தலைமையில் சிவலிங்கத்திற்கு சிறப்பான வழிபாடு நடத்தப்பட்டு 18 சித்தர்களுக்கு வஸ்திரதானம் போன்றவை வழங்கப்பட்டது.

பின்னர், 18 சித்தர்களுடன் ஊர்வலமாக பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது. கோவிலில், ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ராஜபாளையம் பன்னிருதிருமுறை மன்ற ஆன்மீக அடியார்கள் ஞானகுரு ஓதுவார் சாமி தலைமையில் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பாக வழிபாட்டு முறைகளை நடத்தி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!