விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

தொடர் மழையால் விருதுநகர் மாவட்டத்தில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களும் பெரும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை, வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
ai future project