இராசபாளையத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பூமி பூஜை!

ரூ. 88 லட்சம் மதிப்பிலான இந்த நலத்திட்டங்களில் நியாயவிலைக்கடை, நிழல்குடை ,சிமெண்ட் சாலை உள்ளிட்டவை அடங்கும்

சாத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

ராஜபாளையம் அருகே, சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு கிராமங்களில் ரேஷன் கடை சிமிண்ட் சாலை நிழல்குடை ஆகிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமையில் பூமி பூஜை செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு பல கிராமங்கள் இருக்கின்றன. இங்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட ஆறு கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. முறம்பு மில்கேட், பானங்குளம், கோபாலபுரம், சிவலிங்காபுரம். கொருக்காம்பட்டி, வரகுணராமபுரம், ஆகிய 6 கிராமங்களுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு நலத்திட்டங்கள் துவங்கப்பட்டன.

ரூ. 88 லட்சம் மதிப்பிலான இந்த நலத்திட்டங்களில் நியாயவிலைக்கடை, நிழல்குடை ,சிமெண்ட் சாலை உள்ளிட்டவை முக்கியமானதாக இருக்கிறது. இவற்றை துவங்கி வைக்கும் வகையில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் வேல்முருகன், திமுக ஒன்றியச் செயலாளர் ஞானதாஸ் , மதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business