/* */

ராஜபாளையம்: பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பீதி

ராஜபாளையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ராஜபாளையம்: பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு  வெடித்ததால் பீதி
X

நாட்டுவெடிகுண்டு வெடித்த இடத்தை போலீசார் சோதனையிடுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற அன்பழகன் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தார். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் பீதியடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த கண்ணன் என்ற அன்பழகன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். இவர் மீது ஏற்கனவே விலங்குகள் வேட்டையாடியது உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேத்தூர் ஊரக காவல் துறையினர், தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால்= அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 29 May 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு