இராஜபாளையம் பகுதியில் வீடுகளை சுற்றி வளைத்த மழைநீர் : பொதுமக்கள் கடும் அவதி

இராஜபாளையம் பகுதியில் வீடுகளை சுற்றி வளைத்த மழைநீர் : பொதுமக்கள் கடும் அவதி
X

இராசபாளையத்தில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

இராஜபாளையம் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இராஜபாளையம் அருகே வ. உ. சி. நகர் அருகே உள்ள மேலக்குளம் கண்மாய் உடைந்ததால் வாகைகுளம் பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு பாதிக்கப்பட்ட மக்களை சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் சமுசிகாபுரம் பஞ்சாயத்து கீழராஜகுலராமன் பஞ்சாயத்து அய்யனாபுரம் பஞ்சாயத்து பகுதிகளில், காணக்குளம் கண்மாய் மேலகுளம் . கீழ குளம் கண்மாய், நத்தம் பட்டி கண்மாய் என பல்வேறு கண்மாயில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து, நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது .

இதனால், மேலக்குளம் கண்மாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்புகள் பகுதியில் புகுந்ததால் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தங்கள் பகுதிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென சாலை மறியல் போராடத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்களை சத்திரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!