மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழை!

மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பெய்த மழை பற்றிய தகவல்கள்

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மழை

இராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு வெள்ளப் பெருங்கில் சிக்கிக் கொண்ட இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில். இந்த பகுதியில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. தற்போது தண்ணீர் வருவதை அடுத்து விடுமுறை தினமான இன்று இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக சென்று வருகின்றனர்.

இதில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளித்துக் கொண்டு இளைஞர் அந்த கரையில் இருந்து இந்த கரைக்கு வர முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கயிறு கட்டி இளைஞரை பத்திரமாக மீட்டனர்..

திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை பகுதியிலும், மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்தது.

மதுரை நகரில் காலை முதலே வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!