காரில் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:போலீசார் விசாரணை

காரில் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள்  பறிமுதல்:போலீசார் விசாரணை
X

ராஜபாளையத்தில் சொகுசு காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் செய்த போலீசார். 

Police Seized Valuable Tobacco Bags ராஜபாளையத்தில் போலீசார் சோதனை செய்தபோது நிற்காமல் சென்ற கார். இதனை விரட்டிச்சென்று பிடித்தபோது புகையிலைப்பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.

Police Seized Valuable Tobacco Bags


விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி அருகே காவல்துறை சோதனை சாவடி உள்ளது.

இதில், இன்று காலை இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார், தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சார்பு ஆய்வாளர் கௌதம் விஜி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சென்னை பதிவு எண்கொண்ட சொகுசு கார் சார்பு ஆய்வாளர் கௌதம்விஜி மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுள்ளது. போலீஸார், பின்தொடர்ந்தும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள காவல் துறை கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை விரட்டிச் சென்று , சாத்தூரில் பிடித்து சோதனை செய்த போது, காரில் 600 கிலோ கொண்ட 51 பண்டல்களில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர், ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்லாம் மற்றும் சதன்சிங் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசியில் இருந்து வந்த சொகுசு கார் எந்த ஊருக்கு செல்கிறது குட்கா எங்கே இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது எந்தெந்த ஏரியாவில் விற்பனைக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்தூரில் பிடித்த குட்காவின் மதிப்பு 20 லட்சம் என தெரிவித்த போலீசார் தற்போது 12 லட்சம் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!