14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கிராம ஊழியர்கள் முதலமைச்சருக்கு மனு

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கிராம ஊழியர்கள் முதலமைச்சருக்கு மனு
X

வருவாய் கிராம ஊழியர்கள் 14 அமைச்சர் கோரிக்கை வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

வருவாய் கிராம ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சங்கத்தினர் முதல்வருக்கு மனு

வருவாய் கிராம ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

வருவாய் கிராம ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி , தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்ட்டுள்ளது. முதல் வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிராம உதவியாளர்கள் பெற்று வந்த உரிமைகள் நிறுத்தம் செய்ததை திரும்ப வழங்க வேண்டியும்,

கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை கடந்த 08/03/2023 அன்று நிறுத்தப் பட்டதை மீண்டும் வழங்கிட வேண்டியும்,கடந்த 7வது ஊதியக்குழு மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கிய எரிபொருள் படி ரூ2500 கடந்த 7 ஆண்டுகளாக பெற்று வந்ததை நிறுத்தம் செய்யப்பட்டதை திரும்ப வழங்கிட வேண்டும்,

சி.பி.எஸ். பிடித்தம் செய்து இறந்துபோன மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும்வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி பிரிவில் இனணக்க வேண்டும்,சி.பி.எஸ்-யை ஒழித்துவிட்டு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைத்திட வேண்டும்

மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் போனஸ் நாள் கணக்கில் கிராம உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுநர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.01/06/1995க்கு முன்பு பணிபார்த்த காலத்தை பணிகாலமாக எடுத்துகொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை நிரப்பும்போது தேர்வாணயம் மூலம் நிரப்பிட வேண்டும் குறைந்தபட்ச கல்விதகுதி 10ம்வகுப்பு என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.பதவி உயர்வில் சென்று ஓய்வு பெற்றவர்களுக்கு முந்தைய பணி காலத்தை 100 விழுக்காடு எடுத்து கொண்டு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

கிராம ஊழியர்களை கிராம பணியை தவிர அலுவலகத்தில் இரவு காவல் பணி போன்ற மாற்று பணிகளுக்கு பயன்படுத்தகூடாது என்று, நிரந்தர உத்தரவு வழங்கிட வேண்டும்.கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு அன்று 2748 காலிப் பணியிடங்களை நிரப்பி புதியதாக பணிக்கு வந்தவர்களுக்கு முறையாக சிபிஎஸ் கணக்கு எண் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும்.

மலைப்பகுதியில் பணிபார்க்கும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று பாதுகாப்பு உபகரணங்கள் கிராம ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.மேற்கண்ட 14கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சருக் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்ட்டிருந்து. அந்த மனுவை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

மேலும், விருதுநகர் மாவட்ட சங்கத்தின் சார்பாக 23 ந் தேதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம், 7ந் தேதி காத்திருப்பு போராட்டம் 19 ந் தேதி ஒரு நாள் விடுப்பு கொடுப்பது, 28ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil