அருப்புக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவியிடம், செல்போன் வீடியோவில் ஆபாசமாக பேசிய கல்லூரி தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு துணையாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும், ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம் இழப்பதையும், உயிர் இழப்பதையும் தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று திலகபாமா பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல்சாமி, மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!