நரிக்குறவர் குடியிருப்பு திறப்பு விழா: அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..!

நரிக்குறவர் குடியிருப்பு திறப்பு விழா: அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..!
X

காரியாபட்டி அருகே நரிக்குறவர் காலனி குடியிருப்பு திறப்பு விழா.

நரிக்குறவர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருங்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சியில், மந்திரி ஓடையில் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர் குடியிருப்புக்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மந்திரி ஓடையில் நரிக்குறவர்களுக்கு 54 குடியிருப்புகள் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய குடியிருப்பு க்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி யேற்ற பிறகு தமிழகத்தில் மிகவும் பின் தங்கி வாழும் நரிக்குறவர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், காரியாபட்டி பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி, வீடு கட்டுவதற்கு மாவட்ட கனிமவள மேம்பாட்டு நிதியில் 3. கோடியே 50 லட்சம் மதிப்பிட்டில் 54 வீடுகள் கட்டப்பட்டது.


மேலும், பல்வேறு அடிப்படை வசதிகள் குறிப்பாக மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்த போது, இதே காரியாபட்டியில் குடியிருக்கும் நரிக்குறவர் மக்களை அழைத்து பேசினார். நரிக்குறவர் மக்கள் மீது வைத்துள்ள பாசத்தால். அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். உங்கள் வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருக்கும் உங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எப்போதும் ஆதரவாக இருங்கள் என்று ,அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர், தண்டபாணி, வருவாய் கோட்பாட்சியர் வள்ளிக் கண்ணு, யூனியன் ஆணையாளர் சண்முக பிரியா, போத்திராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன், பேரூராட்சித் தலைவர் செந்தில் , ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக் கவுன்சிலர் அரசகுளம் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப் பாளர் தங்கப் பாண்டியன் , கம்பிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லெட்சுமி, பாலு, துணைத் தலைவர் பெரிய காந்தி ஊராட்சி செயலாளர் சமயமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!