ராஜபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து:போலீசார் விசாரணை

ராஜபாளையம் அருகே தனியார்   நூற்பாலையில் தீ விபத்து:போலீசார் விசாரணை
X

ராஜபாளையம் அருகே தனியார் ஸ்பின்னிங்  மில்லில் ஏற்பட்ட  தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர். 

Near Rajapalayam Textile Mill Fire Accidentஇராஜபாளையம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில் லில்தீ விபத்து ஏற்பட்டது.சிவகாசி இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை என 6 வாகனங்கள் தீயை அணைக்க போராடினர்.

Near Rajapalayam Textile Mill Fire Accident

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே, மதுரை சாலையில் மேலபட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பின்புறம் பாரதி நகர் பகுதி சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமானதனியார் நுாற்பாலை உள்ளது.

இன்று காலை வழக்கம் போல் 50க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள்பணியாற்றி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்தில் உள்ளே இருந்த பணியாளர்கள் தப்பித்து சென்றனர். அதனால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .

Near Rajapalayam Textile Mill Fire Accident


6 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் தீயணைப்பு துறையினர்.

உடனடியாக, ராஜபாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜபாளையத்தில் உள்ள இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன மேலும் தீ அதிக அளவில் பரவி வருவதால் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்கள் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க போராடினர்.

மேலும், காவல்துறையினர் அந்தப் பகுதியில் யாரும் வராத அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீ மளமள வென பரவி வந்ததால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும்பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!