ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி

ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி
X

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில், தமிழக நாட்டு இன நாய்களான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் மற்றும் கேரவன் ஹவுண்ட், ராம்பூர் ஹவுண்ட், முதல் ஹவுண்ட் உள்ளிட்ட 300 நாய்கள் கலந்து கொண்டன.

பங்கேற்ற நாய்களின், உடல் அமைப்பு வயது, உயரம், எடை, வேகம் உள்ளிட்ட தன்மைகளை வைத்து சிறந்த எட்டு நாய்களையும், குட்டிகளில் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில், கன்னி இன நாய் முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை சிப்பிப்பாறையும், மூன்றாம் பரிசை ராஜபாளையம் இன நாயும் பெற்றன. நாயின் உரிமையாளர்களுக்கு வெற்றி கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ராஜபாளையம் கிளப் தலைவர் கற்பகச்செல்வம் செய்திருந்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!