ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா

ராஜபாளையத்தில்  தேசிய நுகர்வோர் தின விழா
X

ராஜபாளையத்தில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழா

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி தொடக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் நடத்தும் தேசிய நுகர்வோர் தின விழா இராஜபாளையத்தில் விழா விழிப்புணர்வு ஊர்வலம்:

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்த்தில், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் நடத்தும் தேசிய நுகர்வோர் தின விழா தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது . முன்னதாக, தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி பேரணியை தொடக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மைய செயலாளர் லட்சுமண சாமி வரவேற்று பேசினார். விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் முனைவர் மனோகரன் சாமுவேல் அறிமுக உரையாற்றினார். விழாவில், நுகர்வோர் உரையை டாக்டர் சி. பாக்கியலட்சுமி வழங்கினார். சிறந்த ஊழியருக்கான விருதினை ஆதார் அமைய சேவகர் நொண்டி கருப்பன் பெற்றார் .

மேலும் ,விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில், ராமசுப்பிரமணியன் போக்குவரத்து ஆய்வாளர் லாவண்யா மற்றும் அவினாஷ், திரவியம் உட்பட பலர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள். விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி நிறைவுரை ஆற்றினார். வழக்கறிஞர் ராஜேந்திரன் நன்றி கூறினார். விழாவில், விருதுநகர், இராஜபாளையம், தேசிகாபுரம், மவுண்ட் சீயோன், எட்டிசேரி, அழகாபுரி, அருப்புக்கோட்டை, கொடைக்கானல், சோழபுரம் என்ற பகுதிகளை சேர்ந்த நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation digital future