காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள்: பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு

காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள்: பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு
X

காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

காரியாபட்டியில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு:

காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை, உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டது.

மேலும்,பேருந்து நிலையத்தில் மழை நீர் வடிகால் மற்றும் புதிய நவீன கழிப்பறை வசதிகள் பயணிகள் நிழற் குடைபராமரிப்பு போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டது. பேரூராட்சிகளின் மதுரை மண்டல உதவி இயக்குனர் மணி கண்டன் , காரியாபட்டியில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு விரைவில் திறப்பு விழா காண ஏற்பாடுகளை செய்ய பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, பேரூராட்சித் தலைவர் செந்தில் , செயல் அலுவலர் முருகன், பொறியாளர் கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Next Story
ai tools for education