விருதுநகர் அருகே தாய் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

விருதுநகர் அருகே தாய் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
X

லட்சுமி பிரியா..வயது 28.

விருதுநகர் அருகே நெஞ்சை உலுக்கும் சோகம், குடும்பப் பிரச்சினையில் தனது இரண்டு குழந்தைகளுடன், கிணற்றில் விழுந்து இளம்பெண் தற்கொலை.

விருதுநகர் அருகேயுள்ள தம்மநாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவரது மனைவி லட்சுமிபிரியா (28).

இவர்களுக்கு தக்ஷினி பிரியா(9) என்ற மகளும், சிவசண்முகவேல் (5) மகனும் இருந்தனர். சிவக்குமார் தனியார் வாகனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததுடன், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவக்குமார் குடும்பத்தை சரிவர கவனிக்காததால் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று இரவும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த லட்சுமிபிரியா, தனது வீட்டின் அருகிலிருந்த பாழடைந்த கிணற்றிற்கு தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துச் சென்று, அவர்களை கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு, தானும் கிணற்றில் விழுந்தார். கிணற்றில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் கேள்விப்பட்ட விருதுநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, 3 பேரின் உடல்களை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனின் குடிப் பழக்கத்தினால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, தனது 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்