காரியாபட்டி அருகே அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை அமைச்சர் திறப்பு

காரியாபட்டி அருகே அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை  அமைச்சர் திறப்பு
X

காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் பயணியர் நிழற்குடையை  திறந்து வைத்த அமைச்சர் தங்கம்தென்னரசு

மதுரை - அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோணுகாலில், பயணியர் நிழற்குடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் கிராமத்தில் ,மதுரை - அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் , சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பயணியர் நிழற்குடையை திறந்துவைத்தார்.ஊராட்சி ஒன்றியக்குழுதலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் பாலமுருகன், செயலாளர் கண்ணன் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!