திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
X

திமுக வேட்பாளர் ஆதரித்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரச்சாரம்.

தென்காசி நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பிரசாரம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்போது,

வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மைப் போன்ற சாதாரணமான ஆட்களும் நாடாளுமன்றத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் ராணி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை மக்களவைக்கு அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இந்தியாவுடைய தலையெழுத்தை மாற்றி ஆக வேண்டும். மீண்டும் மோடி வந்தால் நமது தலையெழுத்தை அவர் மாற்றி விடுவார்.

அவர் திரும்பி வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை வந்து விட்டால் தேர்தல் இருக்காது. அவர் மட்டும்தான் இருப்பார். நாம் வாய் திறந்து கூட பேச முடியாது. அப்படி ஒரு சூழல் இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஐஎன்டிஐஏ கூட்டணி உருவாக்கி மோடியை எதிர்க்கிறோம்.

நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அப்படியே உள்ளது. எம்எல்ஏ தேர்தல், ஊராட்சி தேர்தலிலும், எம்பி தேர்தலிலும் நமது கூட்டணி வலுவாக இருக்கிறது. அதற்கு காரணம் தளபதி ஸ்டாலின் அவர்கள். அனைவரையும் அனுசரித்து, மனம் கோணாமல், அனைவரும் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

மோடியை தோற்கடிக்க வேண்டுமே, தவிர நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று பாரபட்சம் இன்றி இந்த கூட்டணியில் உள்ள அனைவரும் சமம் என்று நினைத்து பணியாற்ற வேண்டும்.

நமது கூட்டணி ஆட்சி மத்தியில் வரவேண்டும் என்றால், இன்னும் அதிகம் பணியாற்ற வேண்டும். தென்காசி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் ராஜபாளையம் தொகுதியில் தான் அதிக வாக்கு வாங்க வேண்டும். அது தான் மரியாதை.

எம் எல் ஏ, நகராட்சி சேர்மன், ஊராட்சி சேர்மன் அனைவரும் திமுகவினராக இருப்பதால் இந்த தொகுதியில் அதிக வாக்குகள் திமுகவுக்கு பெற்றுத் தர வேண்டும்.

நமது சொந்த வேலைகளை 15 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு கட்சி பணியாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதி குறித்து மிக எளிமையான முறையில் துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை பொதுமக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்க திமுகவினர் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்