இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு

இராசபாளையம் அருகே அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கயல்விழி ஆய்வு
X

அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி. 

இராசபாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதியும் உள்ளது.

இந்த பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சரிடம், சுந்தரராஜபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் செயல்படக்கூடிய இந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும். கட்டிடங்கள் புதிதாக கட்டி தரவேண்டும்.

மேலும், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் ,10 ஆசிரியகள் பணியாற்றக் கூடிய இடத்தில் ஐந்து ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஆகையால், உடனடியாக காலிபணியிடங்களை நிரப்பி, மாணவ மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆய்வின் போது, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். நகரச் செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்பகராஜ் மற்றும் ஒன்றிய கழகச நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!