சிவகாசி அணைப் பகுதிகளில் மேயர் திடீர் ஆய்வு
சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில் மேயர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகாசி குடிநீர் ஆதாரமானத் திகழ்ந்து வரும் அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு வெம்பக்கோட்டை அணை குடிநீர் ஆதரமாக இருக்கிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில், வெம்பக்கோட்டை அணைப் பகுதியில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் திடீர் ஆய்வு பணிகள் நடைபெற்றது.
கோடை காலத்தில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று மேயர் சங்கீதா இன்பம், அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறினார். அணையிலிருந்த பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் அணையில் நீர் இருப்பு, குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து மேயர் கேட்டறிந்தார்.
அணையின் அருகில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்பவர்களிடம், அணைப் பகுதியில் குளிக்கவோ, குப்பைகளை கொட்டுவதோ கூடாது என்று மேயர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர்கள் குருசாமி, சூரியா, அழகுமயில் பொன்சக்திவேல், சேவுகன், மாமன்ற உறுப்பினர்கள் சசிகுமார், கணேசன், ரவிசங்கர், ராஜேஷ், ஜெயராணி, ஜெயினுலாபுதீன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu