காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்

காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
X

காரியாபட்டி அருகே, அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்.

காரியாபட்டி எஸ். கடம்பன்குளம் கிராம அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, எஸ் கடம்பன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூரண புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்பர் சேமங் குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்து முடிக்கப் பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முதல் நாள் விக்னேஸ்வர பூஜையுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கப் பட்டது. வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் துவார பூஜை, நடந்தது.

இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், மஹா பூர்ணா ஹீதி முடிந்த வுடன் புனித நீர் கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அய்யனார் மற்றும் இதர தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. விழாவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கடமங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture