விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்
X

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 11 ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்

விருதுநகர் மாவட்டத்தில், காலியாக உள்ள 11 ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக நகர்புற உள்ளாட்சி பதவிகளக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காலியாக இருந்த 25 கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில், 14 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். மீதியுள்ள 11 கவுன்சிலர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்காக 28 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாக்குபதிவு நடந்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குபதிவு முடிந்தவுடன், வாக்குபதிவு இயந்திரங்களை பத்திரமாக வைப்பதற்கு 9 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business