இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் நாட்டுவெடிகுண்டு பறிமுதல்: ஒருவர் கைது

இராஜபாளையம் அருகே  சுந்தரராஜபுரத்தில் நாட்டுவெடிகுண்டு பறிமுதல்:  ஒருவர் கைது
X
நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி மகன் குருசாமி( 65 ) . இவர் சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தன்னிச்சையாக நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்திற்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார், குருசாமி காட்டில் சோதனை செய்தபோது 9 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் மற்றும் கைது செய்து வன விலங்கு எதுவும் வேட்டையாடப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சேத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture