காரியாபட்டி அருகே அச்சம்பட்டி முத்தாலம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி அருகே  அச்சம்பட்டி முத்தாலம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
X

அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழா

Kumbabhishekam at Achchampatti Muthalamman Temple

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி அருள்மிகு முத்தாலம்மன் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , முதல்நாள் விக்னேஷ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது . அதன் பிறகு மங்கள் இசையுடன், கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால மஹா சங்கல்பம், பூர்ணாஹுதி முடிந்தவுடன், புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரகலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மஹா தீபாரதனை முடிந்தவுடன், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில், உதவி ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, விழா கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!