சிவகாசியில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்

சிவகாசியில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்
X

சிவகாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவை திமுக கட்சியினர் கொண்டாடினர்.

சிவகாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவை திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவை திமுக கட்சியினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் திமுக கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், தூய்மை சிவகாசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நெகிழி பைகளை முற்றிலும் தவிர்ப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் மேயர் சங்கீதா இன்பம், பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். பின்னர் நெகிழி பைகளை தவிர்ப்போம் என்று வாசகம் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!