காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம்
X

காரியாபட்டி வர்த்தக சங்க செயற்குழுக் கூட்டத்தில்  சங்கத்தலைவர் சந்திரசேகரன் உறுதி மொழி ஏற்பு:

Virudhunagar District- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம்காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Virudhunagar District- காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வர்த்தக சங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் அம்சத் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கோவாப் நாகராஜ் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில் கலந்து கொண்டார். செயல் அலுவலர் ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காரியாபட்டி நகர் பகுதியில் ஒலிபெருக்கி விளம்பரம் மூலமாக வாகனங்ளில் காய்கறி பலசரக்கு பொருட்கள் விற்பதை அனுமதிக்ககூடாது என்றும், போக்குவரத்து விதிக்குட்பட்டு சாலை ஆக்கிரமிப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில், எனது குப்பை - எனது பொறுப்பு என்ற அரசின் விதிமுறையை கடைபிடிப்போம் என்று வணிகர்கள் உறுதிமொழி எடுத்தனர். இதில், நிர்வாகிகள் நாகராஜன், மணிகண்டன், நாகேந்திரன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!