காரியாபட்டி குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டி  குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
X

காரியாபட்டியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம்

Girl Child Protection - விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Girl Child Protection -காரியாபட்டி அருகே குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

காரியாபட்டி அருகே குழந்தை பாதுகாப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அருப்புக்கோட்டை சைல்டுலைன் துணை மையம் சார்பாக காரியாபட்டி கழுவனச் சேரியில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியம்மாள் தலைமை வகித்தார். தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ,குழந்தை பாதுகாப்பு சட்டங்கள்,குழந்தை திருமண தடுப்பு போக்ஸோ சட்டம், காவல்துறை சார்பாக குழந்தை பாதுகாப்பு செயலி குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறப்பட்டது. கூட்டத்தில், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, குழுமத்தின் உறுப்பினர், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பச்சம்மாள்,

காரியாபட்டி மற்றும் அரும்புக்கோட்டை சைல்ட் லைன் ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி மற்றும் தோப்பூர் ஊராட்சி உதவியாளர், பணித்தள பொறுப்பாளர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business