சிவகாசி பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்கம்

சிவகாசி பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்கம்
X
அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த வரை விரைவாக திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டியது முக்கியம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், திறன்மிகு வகுப்பறைகள் துவக்கப் பட்டன. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னாவித் தோட்டம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி, அம்மன் கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிக ளிலும் தலா 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. இந்த வகுப்பறைகள் குளிர்சாதன வசதியுடன் இணையதள வசதி, கணினிகள், தொடுதிரை இயந்திரம், கலந்துரையாடல் நடத்தும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சி பகுதி பள்ளிகளில் உள்ள இந்த திறன்மிகு வகுப்பறைகளை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்து பேசுகையில், அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் மாற்ற வேண்டும்; இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் போல் படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு 14 விதமான விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் தொடக்கக் கல்வியில் இருந்தே கணினியுடன் சேர்ந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என பல்வேறு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை அமைத்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த வரை விரைவாக திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட வேண்டியது முக்கியம். இத்திட்டத்தை செயல்படுத்த நன்கொடையாளர்கள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டனர் .

நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் சாகுல்ஹமீது, உதவி பொறியாளர் அழகேஸ்வரி, மண்டலத் தலைவர் சேவுகன், பள்ளி கல்விக்குழு தலைவர் ஸ்ரீநிகா, மாமன்ற உறுப்பினர்கள் ரவிசங்கர், சசிகலா, ஜெயராணி மற்றம் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!