கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள் கல்லூரியில், கல்லூரி மாணவர்களுக்கான குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் எபிஜேம்ஸ் வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினராக குடிமைப் பொருட்கள் வழங்கல் தனி வட்டாட்சியர் ராமநாதன் கலந்து கொண்டு பேசும்போது, குடிமைப் பொருட்கள் பெறுவது குறித்தும், அனைத்து விதமான சான்றிதழ்கள் பெறுவது குறித்தும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தயக்கம் எதுவும் இல்லாமல் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கங்கள் கேட்டு பயன் பெறலாம். ஒவ்வொருவருக்கும் பொறுப்பும், கடமையும் கண்டிப்பாக இருக்கிறது. அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல் பட வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து பேசியதாவது: இன்று சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலப்படம் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தும் நாம் தான் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். கடைகளில் வாங்கும் பொருட்களின் விலை மற்றும் தரம் உள்ளிட்டவற்றில் எதேனும் குறைபாடுகள் இருந்தால் தயக்கமில்லாமல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
விழிப்புணர்வு என்பது அனைத்து வகைகளிலும் நுகர்வோருக்கு இருக்க வேண்டும். விலை குறைவாக கிடைக்கும் என்ற ஆசையில், பில் போடாமல் பொருட்கள் வாங்குவதும் குற்றம் தான். எனவே எந்த பொருளாக இருந்தாலும் பில் போடாமல் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக, வட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்கள், புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம், நுகர்வோர் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியை வரலாறு துறை மாணவிகள் அங்காளஈஸ்வரி, கனகஜோதி தொகுத்து வழங்கினர். மாணவி சுபிக்க்ஷா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu