ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்
X
பைல் படம்.
ராஜபாளையம் பகுதியில், விசைத்தறி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் ஆனது.

ராஜபாளையம், ஆவாரம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பருத்தி சேலை நெசவு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக நூல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்ததன் காரணமாக, நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த மாதம் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 2 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. கூலி உயர்வு மற்றும் போனஸ் வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், அந்தப்பகுதி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து ராஜபாளையம் தாசில்தார் சீனிவாசன் தலைமையில் தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் தரப்பினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 சதவிகிதம் கூலி உயர்வும், தீபாவளி பண்டிகைக்கு 6 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து 35 நாட்களாக நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் ஆனது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil