மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் 14 அணிகள் தேர்வு

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் 14 அணிகள் தேர்வு
X
இராஜபாளையம், சேத்தூர் சேவுக பாண்டிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் யாழினி ஹாக்கி அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள், சேத்தூர் சேவுக பாண்டிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஹாக்கி போட்டியில் அருப்புக்கோட்டை, விருதுநகர் .சிவகாசி இராஜபாளையம் பகுதியில் இருந்து .ஆண்கள் பெண்கள் என 14 அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் இராஜபாளையம் யாழினி அணியும், சிவகாசி சன் ஹாக்கி அகடாமி அணியும் விளையாடினர். பெண்கள் பிரிவில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சிவகாசி சன் ஹாக்கி அகடாமி அணி வெற்றி பெற்றது.

இதை போல், ஆண்கள் பிரிவில் இராஜபாளையம் யாழினி ஹாக்கி அணி, முதல் இடத்தையும், இரண்டாவது இடத்தை விருதுநகர் காமராஜர் ஹாக்கி அகடாமியும், மூன்றாவது இடத்தை அருப்புகோட்டை எஸ்.வி.கே. மேல்நிலைபள்ளி அணியும், நான்காவது இடத்தை இராஜபாளையம் ஜெய்பீம் ஹாக்கி அகாடமி அணியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுப் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!