சாத்தூரில் சாலைப்பள்ளத்தில் குழந்தையுடன் தடுமாறி விழுந்த பெண்கள்..!
(முதல் படம் )குழந்தையை தூக்கிவரும் பெண்கள். (இரண்டாவது படம்) குடையுடன் குழிக்குள் விழுந்த பெண்
சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால் 3 கைக்குழந்தைகளுடன் பள்ளத்தில் விழுந்த 3 பெண்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு:
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல், போன்ற பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சாத்தூர் மதுரை செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே நகராட்சி நிர்வாக வளாகம் அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடந்து வருகின்றனர்.
அங்கு சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தவறி விழ அவரை தூக்கி விட உடன் வந்த மற்ற இரு பெண்களும் அவர்கள் கையில் வைத்திருந்த குழந்தைகளுடன் தவறி அதே பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி அடிபட்டு அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வெளியே வரும்,காணொளி காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய செய்கிறது.
அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும் பொதுமக்களுக்கானது, ஆனால் சாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ளும் பணிகளை பார்க்கும் பொழுது அவ்வாறு தெரியவில்லை
புதிதாக பணிகள் தொடங்கும் பொழுது பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னரே பணிகள் தொடங்க வேண்டும் அது மழைக்காலமோ அல்லது வெயில் காலமோ பாதுகாப்பு என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மேலும் இதுபோல் விபத்துக்கள் ஏற்படாதவாறு யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த பணியாக இருந்தாலும் முதலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே பணியினை தொடங்கவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu