மதுரை, சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் பலத்த மழை: சாலையோர வியாபாரிகள் கடும் அவதி
பைல் படம்
Heavy Rain News -விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு பலத்த சாரல் மழை பெய்தததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், தற்போது தான் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, ஜவுளி கடைகள் மற்றும் நடைபாதை கடைகளில் வியாபாரம் துவங்கியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் நடைபாதை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் ஊழியர்களுக்கு போனஸ் பணம் வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பணம் வாங்கியவுடன் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வருவார்கள்.நேற்று இரவு நேரத்தில் மழை பெய்ததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இனி வரும் 6 நாட்களில் தீபாவளி பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும்.
இந்த நிலையில் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்து வரும் 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரம், வர்த்தகம், நடைபாதை வியாபாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபாதை வியாபாரத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இருந்தாலும் தீபாவளி பண்டிகை வியாபாரம் நன்றாக நடைபெறும் என்ற நம்பிக்கையில், நடைபாதை வியாபாரிகள் உள்ளனர்.
இதேபோல், மதுரையில் மாலை நேரங்களில் பெய்து வரும் பலத்த மழையால், விளக்குதூண், மேலமாசி வீதி, காமராசர் சாலை, சிம்மத்தில், தெற்கு வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளும், பலத்த மழையால் அவதியடைந்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu