/* */

கனமழை எச்சரிக்கை: ராஜபாளையத்தில் கார்த்திகை தரிசனத்துக்கு தடை

மலை அடிவாரத்தில் வனத்துறையினரும், காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

HIGHLIGHTS

கனமழை எச்சரிக்கை: ராஜபாளையத்தில்  கார்த்திகை தரிசனத்துக்கு தடை
X

மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து ராஜபாளையதில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு ஆற்றில் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப் பட்டதால் ,மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோயில் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மறு கரையில் புகழ்பெற்ற நீர்காத்தஅய்யனார் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் இக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். எனவே ,கார்த்திகை அன்று கோயிலுக்கு ராஜபாளையம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல ஊர்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். ஆற்றில் புனித நீராடிய பின்னர், மறு கரையில் உள்ள அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், முடி எடுப்பது, குழந்தைகளுக்கு காதுகுத்துவது போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துவர்.

இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆற்றில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ,நகரில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்திலேயே தற்காலிக காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மீறி வருபவர்களை தடுக்க மலை அடிவாரத்தில் வனத்துறையினரும், காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், அய்யனார் கோயில் பகுதி முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்ச்சோடி காணப்பட்டது.

இதேபோல், கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக சஞ்சீவி மலையில் உள்ள அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்யவும் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்