காயமடைந்த அதிமுக தொண்டருக்கு, ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்..!

காயமடைந்த அதிமுக தொண்டருக்கு, ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்..!
X

அரிவாள் வெட்டு விழுந்த தொண்டருக்கு, ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

அதிமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினார்.

இராஜபாளையம் அருகே, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரசாரத்தின் போது, திமுக பிரதிநிதி மகன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார் . தட்டிக் கேட்ட அதிமுக தொண்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காயம்பட்டவரை முன்னாள் அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது .இந்த பகுதியில், அதிமுக கட்சி கூட்டணி சார்பில் புதிய தமிழக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

இவர், இராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் . இன்று இராஜபாளையம் அருகே அயன் கொல்ல கொண்டான் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அந்த பகுதியை சேர்ந்த குருசாமி (திமுக) பிரமுகர் மகன் சுரேஷ் , வேட்பாளர் கிருஷ்ணசாமியை காரை விட்டு கிழே இறங்கி பேசு என , ஒருமையில் போசி உள்ளார்.

இதை பார்த்த அப்பகுதிய சேர்ந்த சந்தரலிங்ம் என்பவர் ஏன் இப்படி செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டச் சென்ற பொழுது சுந்தரலிங்கத்தின் தம்பி ரவிச்சந்திரன் தடுக்கச் சென்றார். அப்போது அவருக்கு வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. வேட்பாளர் மத்தியில், அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் இரு கட்சிகள் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, ரவிச்சந்திரனை அதிமுக கட்சி தொண்டர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, சேத்தூர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய சுரேசை தேடி வருகின்றனர் . மேலும், வெட்டுபட்ட ரவிச்சந்திரன் அதிமுகவில் சிறுபான்மை பிரிவு பொறுப்பில் உள்ளார். தன் கட்சித் தொண்டர் பிரசாரத்தின் போது வெட்டுப்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பது குறித்து கேள்விப்பட்ட முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, நேராக அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

ஆளுங்கட்சியாக உள்ள திமுக தேர்தல் நேரத்தில் வன்முறையை கையில் எடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற நோக்கத்தில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்